யாழில் கிணற்றுக்குள் இருந்து பெண்னொருவரின் சடலம் மீட்பு: மனநலம் குன்றிய மகன் கைது

October 9, 2017 11:07 AM

5 0

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகனால் சிறிய பலகையின் மூலம் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட பின்னர் குறித்த பெண்மனி உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அவரது மனநலம் குன்றிய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...