யாழ், மாவட்­டத்­தில் 35 வரு­டங்­க­ளுக்குப் பின்­னர் பனைப் பரம்­பல் கணக்­கெ­டுப்பு!

November 24, 2017 6:52 PM

4 0

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 35 வரு­டங்­க­ளுக்குப் பின்­னர் பனை­க­ளின் பரம்­பல் பற்­றிய கணக்­கெ­டுப்பு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­து என யாழ்ப்­பா­ணம் பனை அபி­வி­ருத்­திச் சபை தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பனை மரங்­க­ளின் பரம்­பல் பற்­றிய கணக்­கெ­டுப்பு 1981 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­போது 11 மில்­லி­யன் பனை­கள் காணப்­பட்­டன. இது­வரை அழி­வ­டைந்த பனை மரங்­க­ளின் எண்­ணிக்கை கணக்­கி­டப்­பட்­டால் அதற்­க­ள­வான விதை­கள் நடு­வ­தன் மூலம் பனை மரங்­க­ளின் பரம்­பலை எமது மாவட்­டத்­தில் தக்­க­வைத்­துக்­கொள்­ள­லாம்.

நடப்­பாண்­டில் இருந்து இந்தக் கணக்­கெ­டுப்பு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் புவி­யி­யல்­துறை எம் முடன் இணைந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...