யாழ்.மாநகரசபை “02ஆம் வட்டார” மழை, வெள்ளப் பாதிப்பு..! (படங்கள்)

April 15, 2018 1:01 PM

8 0

இன்று மதியம் யாழ்.நகர் மற்றும் புறநகர்ப்பகுதியில் பெய்த மழையினால் வீதிகள் ஒழுங்கைகலில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து..,

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சீனியர் ஒழுங்கை மற்றும், கஸ்தூரியார் வீதி, அரசடி வீதிச்சந்தி, மற்றும் கே.கே.எஸ் வீதி – சீனியர் வீதி உள்ஒழுங்கை ஆகிய இடங்களில் தேங்கியுள்ள வெள்ள விபரங்களை, யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் இனது அழைப்பின் பேரில் யாழ். மாநகர சபையின் துணைமேயர் து.ஈசன் மற்றும் உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மாநகர சபையின் பொறியியல் பிரிவுடன் கலந்துரையாடப்பட்டதன் பேரில், புத்தாண்டு விடுமுறையின் பின்னர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இக்கள விஜயத்தில் யாழ்.மாநகர சபையின் துணைமேயர் து.ஈசன் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடினர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...