யாழின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மின்தடை

October 8, 2017 4:17 AM

1 0

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவே இந்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி, தலங்காவில், பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித் துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி ஆகிய பகுதிகளிலும்,

யாழ். 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரையான ஆஸ்பத்திரி வீதி, ஆரிய குளத்திலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரையான ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதியின் ஒரு பகுதியிலும்,

மணிக்கூட்டு வீதியில் ஒருபகுதி, நாவாந்துறை, மீனாட்சி புரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், மாதகல், யம்புகோளப் பட்டிணம், காட்டுப்புலம், குசுமாந்துறை, துரையப்பா விளையாட்டங்கு, யாழ்.கோட்டை, யாழ்.சிறைச்சாலைக் கட்டடத் தொகுதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல்,

மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, கந்தர்மடம் AVNOR பிறைவேற் லிமிற்றெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கிக் கிளை,சிறி நதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் ஆகிய பகுதிகளிலும் இந்த மின்தடை அமுலிலிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...