முள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிவைப்பு

June 14, 2018 5:55 PM

13 0

முள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் 29 பேருக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று மாலை முள்ளிவாய்கால் கிழக்கு கடற்தொழிலாளர் மண்டபத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் க.விஜயகுமார் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உரையாற்றியிருந்தனர்.

அத்துன், சிறப்புரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்தியுள்ளார்.

தொடர்ந்து 29 மாணவர்களுக்கு ஜேர்மனியினை தளமாக கொண்ட புலரும் பூபாளம் நிதி உதவியில் மாணவர்களுக்கான மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இறுதி போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...