முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்

May 18, 2018 9:31 AM

11 0

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடைமறித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்களுக்கு இலங்கை படையினர் குளர்பானம் வழங்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய சைக்கிள் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த மாணவர்களை இடைமறித்த படையினர் அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்க முற்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த மாணவர்கள் அதனை புறக்கணித்து முன்னோக்கி தமது பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த சம்பவம் நல்லெண்ண முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கக்கூடுமா என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...