முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்

May 18, 2018 7:03 AM

15 0

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

இதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றதுடன் அதில், குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூரும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் இன்று காலை முதல் மதியம் வரை மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...