முல்லைத்தீவில் பொலிஸார் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில்

September 17, 2017 10:02 AM

10 0

முல்லைத்தீவு மணலாறு (வெலிஓயா) ஜனகபுர பிரதேசத்தில் நேற்றிரவு போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

கேரளா கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சென்ற பொலிஸார் கஞ்சா விற்பனை செய்த நபரை கைதுசெய்த போது திட்டமிட்டு வந்த சிலர், அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த காரணத்தினால், சந்தேகநபரின் குடும்பத்தினரும் மேலும் 15 பேரும் இணைந்து பொலிஸார் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

எனினும் சம்பவத்தில் கைதுசெய்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவடங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹேஸ் வெலிகன்னவின் ஆலோசனைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4 பேரை கைதுசெய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வெலிஓயா சம்பதநுவர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஏனையோரை கைதுசெய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...