முல்லைத்தீவில் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு சென்ற சிறுவனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்

April 16, 2018 3:46 AM

8 0

முல்லைத்தீவு - மாங்குளம், நீதி­பு­ரம் பகு­தியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்து சிகிச்­சை பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­து சிறு­வ­னவே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சிறு­வன் கடந்த சில நாட்க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்­று காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை கடுமையாக தாக்­கி­யுள்­ளார்.

தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­து சிகிச்­சை பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...