மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பரிதாப பலி..!!

May 16, 2018 6:05 PM

12 0

வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி, மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மட்டும் மின்னல் தாக்கி 7 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வடக்கு 24 பாரகான் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

மேலும், பான்குருகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...