மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!!

February 5, 2018 6:05 AM

8 0

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த சமயத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் ‘ஸ்கூட்டர்’ வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் மறைந்த பின்னர் ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ எனும் பெயரில் தமிழக அரசால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி பெண்கள் மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடங்கிய தினம் முதல் ஒவ்வொரு நாளும் விண்ணப்பங்கள் வாங்குவதற்காக பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வாங்க நீண்ட வரிசையில் பெண்கள் நிற்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வாங்கி கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கெடு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. எனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெறுவதற்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி 6-ந் தேதி (நாளை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...