மீனாட்சி அம்மன் கோவிலை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு: மதுரை கலெக்டர் உத்தரவு..!! (வீடியோ)

February 5, 2018 3:05 PM

6 0

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எதிர்காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் தீ விபத்து ஏற்படாமல் ஆய்வு செய்ய ஐந்து துறைகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, இந்து சமய அற நிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்தராயர் மண்டப கழிவுகளை அகற்றுவது பற்றி ஒரு வாரத்துக்கு பின் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...