மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

September 17, 2017 12:07 PM

11 0

வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

களுத்துறை - யடதொல பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்துக்கு முன்பாகவே மின்சார சபை ஊழியர்கள் தங்கள் பிரதேசத்துக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டதாக யடதொல பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 13ம் திகதி தொடக்கம் இன்று வரை தமது பிரதேசத்தில் மின்சார வசதியின்றி பொதுமக்கள் பெரும் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பொதுமக்கள் மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான மனோநிலை ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...