மாநிலங்களவையில் இனி 22 மொழிகளில் எம்.பி.க்கள் பேசலாம்..!!

July 12, 2018 12:05 PM

10 0

பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தங்குதடையின்றி முன்வைக்கலாம்.

ஆனால் மீதமுள்ள 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மீதமுள்ள டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி உள்ளிட்ட 10 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான வசதி தற்போது செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் வருகிற 18-ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...