முதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு

August 12, 2018 11:42 AM

18 0

முதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு

இலங்­கையில் முதன்­மு­றை­யாக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இவ் வருட, இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி தெரி­வித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்த எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி புனித புத்த தந்­தத்தை தரி­சித்து ஆசிர்­வாதம் பெற்­றுக்­கொண்ட பின்னர் திய­வ­தன நிலமே நிலங்க தேவ­வுடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், முதலில் சிறிய ரக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும். இது முதலில் இரண்டு பய­ணிகள் செல்­லக்­கூ­டிய சிறிய ரக வகையில் அமையும். அது­மட்­டு­மன்றி, மிக இல­கு­வாக குறைந்த விலையில் இவ்­வி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

அதே போன்று இல­கு­வாக விமானப் பயிற்சி பெற்­றுக்­கொள்­ளவும் இதனைப் பயன்­ப­டுத்த முடியும். இதனைத் தயா­ரிப்­ப­தற்­கான விசேட மத்­திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது எனவும் கபில ஜயம்பதி தெரிவித்தார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...