மீண்டும் நாம் எழுவோம், களஞ்சியத்தை நிரப்புவோம்!

October 9, 2017 6:50 AM

10 0

மீண்டும் நாம் எழுவோம், களஞ்சியத்தை நிரப்புவோம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீண்டும் நாம் எழுவோம் களஞ்சியத்தை நிரப்புவோம் என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு, வாகரை பகுதியில் கால் நடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் உதயராணி குகேந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அப்பகுதி மக்களுக்கு கால்நடைகள் என்பன கையளிக்கப்பட்டதோடு, கால் நடை உற்பத்திக்குத் தேவையான போசாக்கினை ஊட்டும் உணவுகள் தயாரிக்கும் முறைகள் தொடர்பாகவும் பயனாளிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வின்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம கலந்து கொண்டார், அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களான கே.சிவநாதன், ஏ.எச்.எம்.அன்சார், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் வைத்தியர் எம்.சி.எம்.யுனைட், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் த.தயானந்த, மாவட்ட கால்நடை வைத்தியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...