மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

January 14, 2018 7:26 PM

17 0

நாளைய தினம் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை என வெளியாகும் செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் வழமைப் போல் பாடசாலைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (15) விடுமுறை தினம் என வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று தைப்பொங்கல் விடுமுறை தினம் வந்தமையினால், நாளைய தினம் அரச விடுமுறை தினம் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அவ்வாறு வெளியாகும் செய்திகளில் எந்தவொரு உண்மையும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் வழமையை போன்று பாடசாலைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சும் நாளைய தினம் அரச விடுமுறை தினம் அல்லவென தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...