மாணவனை முத்தமிட்ட ஆசிரியைக்கு சிறைத்தண்டனை..!!

October 9, 2017 1:30 AM

5 0

பிரித்தானிய நாட்டில் மாணவனுக்கு முத்தமிட்டு பாலியல் செயலில் ஈடுப்பட்ட இளம் ஆசிரியைக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் Alice McBrearty(23) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரிடம் 15 வயதுள்ள மாணவன் கல்வி பயின்று வந்துள்ளார், இந்நிலையில் மாணவனுடன் ஆசிரியை தகாத முறையில் நடந்து வந்துள்ளார்.

தனியாக இருந்த மாணவனை முத்தமிடுவது, காரில் அழைத்துச்சென்று பாலியல் செயல்களில் ஈடுப்படுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இவ்விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஆசிரியை மீது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஆசிரியை மீதான இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது ஆசிரியையின் செயலை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

‘கல்வி பயில வந்த மாணவனிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டது மன்னிக்க முடியாத குற்றம்.

மாணவன், ஆசிரியை என்ற உறவை மீறி அவரது நம்பிக்கையை உடைக்கும் செயல் கடுமையாக தண்டிக்க வேண்டிய குற்றம்.

எனவே சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய ஆசிரியைக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...