மோடியை திருமணம் செய்ய வேண்டும்: போராடும் பெண்

October 8, 2017 3:47 AM

9 0

மோடியை திருமணம் செய்ய வேண்டும்: போராடும் பெண்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்ய வேண்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த ஓம் சாந்தி சர்மா(வயது 40) என்ற பெண்ணே இவ்வாறு போராடி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 20 வயதில் மகள் உள்ள நிலையில் முதல் திருமண வாழ்க்கை முறிந்து போனது.

இதனைதொடர்ந்து மோடியை திருமணம் செய்ய வேண்டி போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆனால் நான் மோடியை விரும்புகிறேன், அவர் தனியாக இருக்கிறார், அவரை சந்திக்க அனுமதி தர மறுக்கின்றனர்.

என்னை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர், என்னுடைய சொத்துக்களை விற்று மோடியை காப்பாற்றுவேன்.

பிரதமர் வந்து சந்திக்கும்வரை என்னுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...