முச்சக்கரவண்டி சாரதியின் மோசமான செயற்பாடு: பொது மக்கள் விசனம்

October 9, 2017 12:56 PM

7 0

முச்சக்கரவண்டி சாரதியின் மோசமான செயற்பாடு: பொது மக்கள் விசனம்

வாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த சினைப் பசுவொன்றின் மீது முச்சக்கரவண்டி சாரதி மோதி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னுள்ள வீதியில் வந்த சினைப் பசுவின் மீது வாழைச்சேனை சந்தையை நோக்கி சென்ற முச்சகர வண்டி சாரதியொருவர் மோதியுள்ளார்.

இதனையடுத்து சினைப் பசு காயங்களுடன் வீதியில் விழுந்துள்ள நிலையில் சாரதி தப்பியோடியுள்ளதுடன், பசுவை பொது மக்கள் வீதியோரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வீதியால் அதிவேகத்தில் செல்லும் சாரதிகள் வீதியில் செல்பவர்களை அவதானிக்காமல் வாகனத்தை செலுத்துகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...