மஹிந்த – மோடி இடையில் இடம்பெற்றது தனிப்பட்ட கலந்துரையாடல் மட்டுமே..!!

September 16, 2018 7:22 AM

7 0

வெளிநாடுகளுடன் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை இருப்பது மிகவும் முக்கியமான விடயம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட இந்திய விஜயம் இந்த நிலமை வளர்ச்சியடைய செய்த ஒரு சந்தர்ப்பம் எனவும் இதன் போது இடம்பெற்ற கலந்துலையாடல் வெற்றியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) மெனிக்ஹின்ன விகாரையில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்றது அரசியல் கலந்துரையாடல் இல்லை எனவும் அது தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்று மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் அரசியல் ரீதியான நோக்கத்தில் மேற்கொண்ட விஜயம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...