மஹிந்தவிடம் சிறுமி கேட்ட கேள்வி!

February 5, 2018 3:47 PM

11 0

நாட்டின் சிறுமி ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

நேற்றைய தினம் இலங்கையின் எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது என சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பியதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்று (நேற்று) சுதந்திர தினம். விகாரையில் சிறுமி ஒருவர் என்னிடம் வந்து எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது என கேட்டார்.

நான் 70வது சுதந்திர தினம் என கூறினேன். உங்களுக்கு பிழைத்து விட்டது அப்பச்சி... இது 30வது சுதந்திரம் தினம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார் என்று சிறுமி சொன்னார். எனினும் இது 70வது சுதந்திரம் தினம் என்றே எனக்கு தெரியும் என நான் கூறினேன்.

ஆட்சியாளர்களுக்கு 70க்கும் 30க்கும் இடையில் பிழைக்கின்றது. பில்லியன் கணக்குகளில் பிழைகள் ஏற்பட்டுள்ளது. மில்லியன் ட்ரில்லியன் கணக்காகியது. தற்போது 10 ட்ரில்லியனுக்கு என்னானது என தெரியாதென கூறுகின்றார்கள்.

வரலாற்றில் என்றுமே நாம் 10 ட்ரில்லியன் கடன்பட்டதில்லை. 2 ட்ரில்லியன் மாத்திரமே கடன் உள்ளது. நாம் பெற்ற கடன் பணத்தில் என்ன செய்தோம் என பார்ப்பதற்கு காங்கேசன்துறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை சென்றால் பார்க்கலாம் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...