மழை நேரத்தில் வீதிகளில் தூங்கும் கட்டக்காலி மாடுகளால் பயணிகள் அசௌகரியம்: வவு.தெற்கு பிரதேசபை அசமந்தம்.!! (படங்கள்)

November 7, 2018 12:40 PM

17 0

மழை நேரத்தில் வீதிகளில் தூங்கும் கட்டக்காலி மாடுகளால் பயணிகள் அசௌகரியம்: வவு.தெற்கு பிரதேசபை அசமந்தம்.!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மழை தொடங்கியுள்ள நிலையில் நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாரதிபுரம், குளுமாட்டுச்சந்தி, உக்கிளாங்குளம், கூமாங்குளம் போன்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாகாலி மாடுகள் வீதிகளில் நிற்பதால் போக்குவரத்து செய்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...