மரணத்தின் பிடியில் இருப்பவருக்கு காதலியுடன் திருமணம்..!!

February 12, 2018 9:00 PM

9 0

அமெரிக்காவில் உள்ள வில்லியம் ஸ்போட் என்ற இடத்தை சேர்ந்தவர் டொனால்டுஜெட். அதே பகுதியை சேர்ந்தவர் ஜூலி. இவர்கள் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல் நிறைவேறவில்லை. ஜூலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் நீடிக்கவில்லை. ஜூலி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் பழைய காதலன் டொனால்டுஜெட் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருடைய இரு சிறுநீரங்களும் செயல் இழந்தன. இனி அவரால் உயிர்பிழைக்க முடியாது என்று டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.

இதற்கிடையே டொனால்டு ஜெட்டை ஜூலி பார்க்க வந்தார். அப்போது டொனால்டு ஜெட் தனது கடைசி ஆசையாக ஜூலியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு ஜூலியும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. டொனால்டுஜெட் படுக்கையில் இருந்த நிலையிலேயே அவர்கள் திருமணம் நடந்தது. உறவினர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் அவர்களை வாழ்த்தினார்கள்.

இதுதொடர்பாக டொனால்டுஜெட் கூறும்போது, இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம் என்று கூறினார். இன்னும் சில நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் என்ற நிலையில் அவர் இருக்க தற்போது ஜூலி அவருக்கு ஆதரவாக இருந்து கவனித்து வருகிறார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...