மனைவி பிள்ளையை கொன்ற கொடூர கணவன்!

September 17, 2017 7:55 AM

12 0

மனைவி பிள்ளையை கொன்ற கொடூர கணவன்!

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் தாலுகா சதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. இவரது மனைவி அனுஷா (வயது 28). இவர்களுக்கு பூர்விகா (வயது 6) மற்றும் லிகித்தா (வயது 2) என்ற இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். வெகுநாட்களாக இவர்கள் வீட்டில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பத்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மது, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இன்று கால்வாயில் தள்ளி கொன்றுள்ளார். பின்னர் கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து மது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூர்விகாவின் உடலை மீட்டனர். மற்ற இருவரின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம்: eeladhesam.com

வகை பக்கம்

Loading...