மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்

May 18, 2018 7:33 AM

20 0

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்

பாம்பனிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரிய மீன் என்று அழைக்கப்படும் குறித்த மீன் அண்மையில் மன்னார் வளைகுடா பாம்பன் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த மீன் பெரும்பாலும் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளிலேயே காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அது பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளமை மிகவும் அரிதாகும் என்பதுடன் அந்த மீன் நண்டு, சிப்பிகள், இறால் ஆகியவற்றை உணவாக கொள்ளக்கூடியது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...