மன்னாரில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு…!!

January 14, 2018 10:25 AM

22 0

மன்னார், சிலாபத்துறை பகுதியிலிருந்து வெளிஇடத்திற்கு கடத்திச் செல்லப்படவிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சாப் பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் கஞ்சா கடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிரடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

குறித்த பகுதியில் இருந்து சுமார் 356 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாப் பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாவென பொலிஸார் தெரிவித்தனர்.

கேரள கஞ்சா பொதிகள் மன்னார் தென் கடல் ஊடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...