மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள்

February 10, 2018 5:59 AM

4 0

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள்

உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான தேர்தல்இன்று நடைபெறும்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 94 வாக்கெடுப்பு நிலைங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 47 வட்டாரங்களில் இருந்தும் 54 உறுப்பினர்களை தெரிவு செய்ய 86 ஆயிரத்து 94 பேர் தகுதிபெற்றுள்ளனர்.-வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதோடு,தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...