மன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி

August 12, 2018 9:08 PM

16 0

மன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி

மன்னார் நகர சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்களின் செயற்பாடுகள் முன் உதாரணமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் பொது சேமக்காலையின் சிரமதானப் பணிகள் இன்று மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து முன்னெடுத்தனர்.

இதன் போது மன்னார் பொது சேமக்காலையின் உள்ளக பகுதிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை தலைவர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களின் உதவியுடன் மேற்கொண்ட சிரமதான பணிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...