மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியது- 4 பேர் பலி.

January 14, 2019 6:05 PM

138 0

மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சேல்டேகா கிராமம் அருகே வந்தபோது, எதிரே ஒரு லாரி அதிவேகமாக வந்தது.

அப்போது லாரி மீது மோதாமல் இருப்பதற்காக துணை சபாநாயகரின் கார் டிரைவர், ஸ்டியரிங்கை சாலையோரம் திருப்பினார். இதனால் அந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள வயலுக்குள் இறங்கியது. ஆனால், பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 3 போலீஸ்காரர்கள் மற்றும் டிரைவர் என 4 பேர் உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...