மத்திய அரசுக்கு 10 மாதங்களில் ரூ.6.95 லட்சம் கோடி நேரடி வரி வசூல்..!!

February 10, 2018 10:05 AM

5 0

மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 10 மாத காலகட்டத்தில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி நேரடி வரி வசூல் செய்து உள்ளது. 2017-18 நிதி ஆண்டுக்கான நேரடி வரியின் திருத்திய மதிப்பீடான ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் இது 69.2 சதவீதம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஜனவரி, 2018 வரையிலான நேரடி வரி நிகர வசூல் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி என தற்காலிக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.3 சதவீதம் அதிகம் ஆகும்” என கூறப்பட்டு உள்ளது. மேலும், பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி நிகர வசூல் 19.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. தனிநபர் வருமான வரி நிகர வசூல் 18.6 சதவீதம் பெருகி இருக்கிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...