மத்துகமவில் இனி மாட்டிறைச்சிக்கு தடை

June 11, 2018 7:48 AM

9 0

மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக்கடையை நிரந்தரமாக மூடுவதற்காக பிவித்துரு ஹெல உறுமயவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் நாரவில சமித்தவஞ்ச தேரர் பிரதேச சபையில் முன்வைத்த குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த மாட்டிறைச்சி கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதி பத்திரத்தினை வழங்குவது தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த பிரேரணை மீது மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

அத்துடன், மூவருக்கு எதிராகவும் மேலும் மூவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரேரணை 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...