மண்முனை தென் மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி..!! (படங்கள்)

May 17, 2018 5:20 PM

10 0

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு இன்று (வியாழக்கிழமை) தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

சபையின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் மௌன இறைவணக்க அஞ்சலி செலுத்துமாறு தவிசாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சிபேதங்களுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடர்ந்து வழமைபோல் நடைபெற்றதுடன் இந்த மாதம் மேற்கொள்ள்படவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான நிதி அனுமதியும் வழங்கப்பட்டது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...