மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க சென்னை-காசிபேட் வழித்தடத்தில் ஆய்வு..!

October 11, 2017 6:05 AM

8 0

சென்னைக்கும், தெலுங்கானா மாநிலம் காசிபேட்டுக்கும் இடையிலான 643 கி.மீ. தூரத்தை 3 மணி 15 நிமிட நேரத்தில் அடையும்வகையில், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே துறைக்கும், ஜெர்மனிக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. 22 மாதங்களில், 3 கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். தற்போது, இந்த வழித்தடத்தில், சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ற ஒரே ஒரு நேரடி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் பயண நேரம், 11 மணி நேரம் 20 நிமிடம் ஆகும்.

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் அதிவேக ரெயில்கள் இயக்கும் அளவுக்கு வழித்தடம் தரம் உயர்த்தப்பட்டால், பயணிகள் 3 மணி 15 நிமிட நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...