மட்டக்களப்பில் போதைப் பொருட்கள் மீட்பு..!! (படங்கள்)

April 16, 2018 3:10 PM

10 0

மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோத போதைப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) காலை கைப்பற்றப்பட்டன.

மேற்படி சுற்றிவளைப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பீ.ரீ.நஸீர் தெரிவித்தார்.

பாவற்கொடிச்சேனை மற்றும் காஞ்சிரங்குடா பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது 400 லீற்றர் கோடா 2 பரல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளபோதும் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...