மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமனம்..!!

November 15, 2017 5:18 AM

18 0

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்சரவை பரிந்துரை செய்து அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு, தமது வாழ்த்தையும் வரவேற்பையும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகம் சார்பாக ஆலயத்தின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...