மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதுவருட நிகழ்வு..!! (படங்கள்)

April 16, 2018 3:15 PM

11 0

தமிழ் – சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட புதுவருட நிகழ்வு இன்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பணிமனை வளாகத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தீகா வதுற வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் விசேட புதுவருட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் W J . ஜாகொட ஆராய்ச்சி தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சர்வமத வழிபாடுகள் நடைபெற்றது ,இதனை தொடர்ந்து அதிதிகளின் விசேட புதுவருட வாழ்த்து செய்திகளும் தொடர்ந்து பாரம்பரிய உணவு பரிமாறல் கலாசார நிகழ்வும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் .எம் .உதயகுமார் ,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் பிரபாகரன் ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் ,சர்வமத தலைவர்கள் ,வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,சிவில் சமூக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...