மகிந்த ஆதரவாளர்களின் பதவியை பறித்த மைத்திரி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு

October 13, 2017 9:06 AM

4 0

மகிந்த ஆதரவாளர்களின் பதவியை பறித்த மைத்திரி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா ஜனாதிபதி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில், அவ்விடத்திற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் எச்.ஏ.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, குமார வெல்கம வகித்து வந்த மத்துகம தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் பதவிக்கு சுமித்ரா பிரியங்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்கு வைத்து இரு பிரதான கட்சிகளும் செயற்பட்டு வரும் நிலையில், கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையாக மைத்திரி இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஆதாரம்: eeladhesam.com

வகை பக்கம்

Loading...