மகிந்தவிற்கு சவால் விடுத்துள்ள மங்கள சமரவீர!

July 13, 2018 4:56 PM

11 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேரடியாக விவாதம் ஒன்றுக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த சில மாதங்களுக்குள் இரு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிக்கை விடுத்திருந்தார் இது தொடர்பில் கேட்ட போது,

மஹிந்த ராஜபக்ஷ தங்களது காலத்தை மறந்த நிலையில், கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இறுதிக் கால கட்டத்தில் காணப்பட்ட எரிபொருள் விலை, நல்லாட்சி அரசாங்கத்தினால் தற்பொழுது இறுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை விடவும் அதிகமாகும் என்றார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...