மக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இளம் யுவதி உட்பட மூன்று பேர் கைது

July 12, 2018 6:22 AM

8 0

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை நேற்று மாலை கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதில் பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 21 வயதுடைய நபரிடம் இருந்து 15,000 ரூபாய் பெறுமதியான இரண்டு கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாய் பெறுமதியான மூன்று கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணிடம் இருந்து 25,000 ரூபாய் பெறுமதியான ஐந்து கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள் என்பன வியாபார நடவடிக்கைக்கு கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துறைச்சேனை பகுதியில் அதிக போதை பாவனை இடம்பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...