மகளிர் டி-20… கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்… 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது..!!

June 11, 2018 5:55 AM

7 0

தொடர்ந்து 6 முறையும் மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு வங்கதேசம் அதிர்ச்சி அளித்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று வங்கதேசம் கோப்பையை தட்டிச் சென்றது. 7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடந்தன. இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தற்போது 7வது முறையாக இந்தியா பைனல் நுழைந்தது. பைனலில வங்கதேசத்தை சந்தித்தது. மிகவும் இந்திய மகளிர் அணி ஏழாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. துவக்கத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.

ஹர்மன் காப்பாற்றினார் 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற நிலையில் இந்தியா தடுமாறியது. ஒரு பக்கம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. கடைசியில் 56 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் கவுரும் ஆட்டமிழந்தார். இந்தியா 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் ரன் குவிப்பு 113 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய வங்கதேசம் துவக்கத்தில் இருந்தே நிதானமாக ரன்களை குவித்து வந்தது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...