மகனுக்கு நல்வழி புகட்ட முற்பட்ட தாய் தீயில் எரிந்து அநியாய உயிரிழப்பு!

December 2, 2017 11:00 AM

5 0

மகனுக்கு நல்வழி புகட்ட முற்பட்ட தாய் தீயில் எரிந்து அநியாய உயிரிழப்பு!

பாட­சா­லைக்குச் செல்­லாத மகனை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் நோக்­கில் தாய் எடுத்த முடிவு, அவ­ரது உயி­ரைப் பறித்­துள்­ளது.

இந்­தச் சோகச் சம்­ப­வம் புத்­த­ளம் மாவட்­டத்­தின் பிங்­கி­ரிய பிர­தே­சத்­தில் நடை­பெற்­றது.

பாட­சா­லைக்குச் செல்­லாது இருக்­கும் தனது ஒரே மகனைத் திருத்­தும் நோக்­கில் தாய் மண்­ணெண்­ணெயை உட­லில் ஊற்­றிக் கொண்டு தற்­கொலை செய்து கொள்­ளப் போவ­தாகத் தீக்­குச்­சியை பற்ற வைத்து எச்­ச­ரிக்கை விடுத்தபோது தவ­று­த­லாக உட­லில் தீப் பற்றி உடல் முழு­வ­தும் கருகிப் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

மனை­விக்­கும் மக­னுக்­கும் இடை­யில் அடிக்­கடி சண்­டை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் இதன்­போது பல தட­வை­கள் இவ்­வாறு தனது மனைவி தற்­கொலை செய்­வ­தாக மகனை எச்­ச­ரித்­ததா­க வும் உயி­ரி­ழந்த பெண்­ணின் கண­வர் தெரி­வித்­தார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...