பொலிஸ் நிலையத்தில் ஆஜராக நாமலிற்கு உத்தரவு!

October 9, 2017 1:30 PM

5 0

பொலிஸ் நிலையத்தில் ஆஜராக நாமலிற்கு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 3 மாகாண சபை உறுப்பினர்களை நாளை 5 மணிக்கு ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அத்துகோரல, மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரே ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு திகதியை வழங்க ஹம்பாந்தோட்டை பொலிஸார் முன்னர் தெரிவித்த நிலையிலேயே நாளை உடனடியாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...