பொலிஸ் அதிகாரியின் கட்டை விரலை கடித்து துப்பிய இளம்பெண்..!!

February 10, 2018 12:30 AM

4 0

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் கைவிலங்கு பயன்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரியின் கட்டை விரலை இளம்பெண் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயின் Naif பகுதியில் சந்தேக நபர்களின் வாகனங்களை நிறுத்தி பொலிசார் வதிவிட ஆவணங்களை சோதனையிட்டு வந்துள்ளனர்.அப்போது 24 வயது உகாண்டா நாட்டவரின் வாகனத்தையும் நிறுத்தி வதிவிட ஆவணங்களை பொலிசார் கேட்டுள்ளனர்.

ஆனால் பொலிசாருடன் குறித்த இளம்பெண் ஒத்துழைக்க மறுத்துள்ளதுடன், அப்பகுதியில் இருந்து தப்பிக்கவும் முயன்றுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட பொலிசார் அவரது கைகளில் விலங்கிட முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே குறித்த இளம்பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரது கட்டை விரலை பலம்கொண்ட மட்டும் கடித்துள்ளார்.

இருப்பினும் பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். பொலிசாரை தங்கள் கடைமையை செய்யவிடாமல் தடுத்தமைக்காகவும், காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றதற்காகவும், உரிய வதிவிட ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும், குறித்த உகாண்டா நாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...