பாலியல் ரோபோக்களினால் மனித குலத்திற்கு ஆபத்து!

September 17, 2017 2:10 PM

17 0

பாலியல் ரோபோக்களினால் மனித குலத்திற்கு ஆபத்து!

பாலியல் ரோபோக்களினால் மனித குலத்திற்கு ஆபத்து! நிபுணர்களால் எச்சரிக்கை விடுப்பு.

நவீன பாலியல் ரோபோக்களால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வேலைகளை செய்யக்கூடிய ரோபோக்களுடன், தத்ரூபமாக மனித சாயல் கொண்ட ரோபோக்களும் உருவாக்கப்படுகின்றன.

அதேவேளை, சில நிறுவனங்கள் இத்தகைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் பொம்மைகளை தயாரிக்கின்றனர். அசல் மனிதர்களைப் போன்ற இந்த பொம்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பாலியல் தொழில் இடம்பெறும் விடுதிகளும் சில நாடுகளில் உருவாக்கியுள்ளன.

தமது வாடிக்கையாளர்கள் சிலர் திருமணம் செய்து கொள்வதற்காகவும் இந்த ரோபோக்களை கொள்வனவு செய்வதாக நிறுவனமொன்று தெரிவிக்கின்றது.

பாலியல் ரோபோக்களினால் மனித குலத்திற்கு ஆபத்து! நிபுணர்களால் எச்சரிக்கை விடுப்பு.

ஆனால், நவீன கணினித் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி தயாரிக்கப்படும் இத்தகைய பாலியல் ரோபோக்கள் மனிதர்களின் எதிரிகளாகவும் மாறலாம் என்கின்றார் கணினி பாதுகாப்புத்துறை நிபுணரான கலாநிதி நிக் பீட்டர்சன்.

அவுஸ்ரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி நிக்கலஸ் பீடட்டர்சன், இது தொடர்பாக கூறுகையில், நவீன பாலியல் ரோபோக்களின் கணினிகளுக்குள் ஊடுருவி மனிதர்களைக் கொல்லுமாறு அவற்றுக்கு கட்டளை பிறப்பிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.

இத்தகைய ரோபோக்களை கணினி ஊடுருவல்காரர்கள் ஊடுருவினால், சேதங்களை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளுக்கு அவற்றைப் பயன்படுத்த நிச்சயம் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...