போலீசாருடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் நாய் – வைரலாகும் வீடியோ..!!!

November 24, 2017 9:00 AM

4 0

அமெரிக்காவின் அலாபாமா மாகாணத்தில் உள்ள போலீசார் வெளியிட்டுள்ள வீடியொ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் போலீசார் இரண்டு பேர் உடற்பயிற்சி செய்கின்றனர். அப்போது அவர்களுடன் இணைந்து நாய் ஒன்று உடற்பயிற்சி செய்கிறது.

போலீஸ் துறையில் பயிற்சி பெற்ற நாய் உடற்பயிற்சி செய்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் நாய் உடற்பயிற்சி செய்யும் போது பாடல் இசைக்கப்பட்டது. நாய் பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்தது. 2 வயதான டஜ் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய் போலீஸ் துறையில் பல சாதனைகள் புரிந்து வருகின்றன. அந்த வீடியோவை 7 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். 25,400 பேர் இதனை பகிர்ந்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...