புலம்பெயர் மாணவர்களுக்கு இலங்கை அரசின் மகிழ்ச்சிகர செய்தி

July 7, 2018 7:00 PM

9 0

புலம்பெயர்ந்துள்ள இலங்கை மாணவர்களுக்கு, கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சையை வெளிநாடுகளில் நடத்த பரீட்சைகள் திணைக்களம் ஆலோசனை நடத்திவருகிறது.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட மையம் இதனை தெரிவித்துள்ளது.

பெருமளவான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் கல்விகற்று வருகின்றனர்.

அவர்கள் இலங்கையின் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பளிப்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தப்படுகிறது.

இது நடைமுறைக்கு வருமானால், அதற்கான செலவுகளை மாணவர்களின் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...