புலனாய்வு துறையினர் மூலம் கிடைத்த இரகசிய தகவலால் மீட்கப்பட்ட பொதி

June 11, 2018 3:57 AM

11 0

புலனாய்வு துறையினர் மூலம் கிடைத்த இரகசிய தகவலால் மீட்கப்பட்ட பொதி

மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை போலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது பொதியிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொகுதி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை 20.2 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா உள்ளூர் விற்பனைக்காகவா அல்லது வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பேசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கைப்பற்றபட்ட கஞ்சா இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...