பிரான்சில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முன்னணி நிறுவனம் முடிவு..!!

October 13, 2017 1:00 AM

4 0

பிரான்ஸில் உள்ள கூகுள் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் செபஸ்டியன் மிஸ்ஸஃப் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் தலைவர் செபஸ்டின் மிஸ்ஸஃப் அளித்துள்ள பேட்டியில், அடுத்த வருடத்தின் இறுதிக்குள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை 700-லிருந்து 1000- ஆக உயர்த்தவுள்ளோம்.

முக்கியமாக பொறியாளர்களை அதிகம் பணிக்கு சேர்க்கவுள்ளோம். இதோடு எங்கள் அலுவலகத்தின் அளவை 10,000-லிருந்து 20,000 சதுர மீட்டராக உயர்த்தவும் முடிவெடுத்துள்ளோம்.

மின்னணு முறையில் வர்த்தக பரிவர்த்தனைகள் பிரான்ஸில் மிக குறைவாக உள்ளது. நாட்டின் 16% நிறுவனங்கள் மட்டுமே மின்வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. இதை அதிகரிக்கவே இவ்வாறு செய்யவுள்ளோம்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...