பிரான்சில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது: அவர்களிடம் எவ்வளவு யூரோக்கள் கைப்பற்றப்பட்டது தெரியுமா?..!!

October 14, 2018 12:00 AM

15 0

பிரான்சில் பல மாவட்டங்களில் உள்ள 98 வீடுகளில் கொள்ளையடித்த ஆறு கொள்ளையர்களை ஜோந்தாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை Bergerac பகுதியில் ஆறு கொள்ளையர்கள் பிடிபட்டனர். இவர்கள் தென் மேற்கு மாவட்டங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஆல்பேனிய நாட்டு குடியுரிமை கொண்டவர்கள். clan des Albanais என தங்கள் குழுவுக்கு பெயர் சூட்டிக்கொண்டு, இதுவரை 98 வீடுகளில் திருடியுள்ளனர்.இவர்களிடம் இருந்து €423,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு குறித்த பகுதிக்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஜோந்தாமினர்கள், குறித்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...